கொரோனா தடுப்பூசி திருவிழா நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பவலலைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று அலோசனை நடத்துகிறார்.


இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. பொதுவெளிகள் செல்லும் போது மாக்ஸ் அணியாதவர்களிடம் அபதாரம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. அதேசமயம் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,027 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,23,36,036 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 82,339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 13,65,704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று வரை 11,11,79,578 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.