கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இப்போதைக்கு புதிய கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை சீராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, தலைமை செயலளார் சண்முகம் இன்று பதிலளித்திருக்கிறார்.
அந்த பதிலில், அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கொரோனா உச்சம் தொடும் என்றுள்ளார். மேலும் அந்த மாவட்டங்களில் மருத்துவ உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் அவர் தமிழகத்தில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில், அடுத்த 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை உள்பட பெரும்பாலான நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தலைமை செயலளார் சண்முகம், ``அடுத்த 15 நாட்களில் கோவை, திருவண்ணாமலை, நாகை, கடலூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதை எதிர்கொள்ளும் வகையில் இந்த மாவட்டங்களில் கூடுதல் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமைதான் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுக்கு சண்முகம் எழுதி இருந்த கடிதத்தில், ''கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படக்கூடாது. கூடுதல் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
கோயம்புத்தூரில் மட்டும் இதுவரை 20000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, புதிதாக 445 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இந்த தொற்றில் இருந்து 16,164 கொரோனா நோயாளிகள் மீண்டுள்ளனர். 338 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4,80,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி எண்ணிக்கை 6,000 ஆக உள்ளது. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவுக்கு 75,062 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு 55,453,50 ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளைச் செய்துள்ளோம்" என தெரிவித்தார். மேலும், சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நாகை, கடலூர், கோவை, சேலம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். மேலும், கொரோனா சிகிச்சைக்கென சில நபர்களே தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர் என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கோவிட் வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இ-சஞ்சீவினி செயலி மூலம் இதுவரை 1 லட்சம் நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோவிட்-ஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிலையில்தான் உள்ளது எனவும் ஐ.சி.எம்.ஆர் அளித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து மனிதப் பரிசோதனை நடத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் அதிகம் காணப்படுவதால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேவையான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.அமைச்சரைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுமக்கள் அனைவருக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றில் பொதுமக்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அரசிற்கு தொடர்ந்து தேவை என தெரிவித்தார். தமிழகத்தில் 1.68 விழுக்காடாகக் குறைந்துள்ள இறப்பு விகிதத்தை 1 சதவிதத்துக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.