ஒருநாளில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும் நபர்களுக்கான பட்டியலில் உலக நாடுகளிலேயே இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் நேற்றைய தினம், புதன்கிழமையன்று மட்டும் 69,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
உலக நாடுகளில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,25,56,29 என்றுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,88,834 என்றுள்ளது. இதுவரை உலக நாடுகள் அனைத்திலும் ஏற்பட்டிருக்கும் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 789,957 ஆகும்.
அமெரிக்காவில் இதுவரை 43,194 பேருக்கும் பிரேசிலில் 48,541 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மொத்த பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,699,168; பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,460,413. இந்தியாவில் இது 2,835,822 ஆக உள்ளது
அமெரிக்காவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,060,513; பிரேசிலில் 2,615,254; இந்தியாவில் 2,096,068 பேர் குணமடைந்தும் உள்ளனர். கொரோனா மரணங்களில் அமெரிக்காவில் 176,290 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 111,189 பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 53,994 பேர் கொரோனாவால் மரணித்துள்ளன
கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கான பட்டியலில்க், முதல் இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 27 லட்சத்து 51 ஆயிரத்து 246 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள் 2-ம் இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு குணம் அடைந்தோர் எண்ணிக்கை நேற்று காலை நிலவரப்படி 20 லட்சத்து 37 ஆயிரத்து 870 ஆக உள்ளது.
இதில், நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 91 பேர் கொரோனாவில் இருந்து நலம் பெற்று, வீடு திரும்பி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் விகிதம் என்பது 73.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தோர் எண்ணிக்கை உயர்ந்ததின் காரணமாக இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக சரிந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பிற தகவல்கள் இங்கே :
``நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 514 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 4-ல் ஒரு பங்கை விட குறைவு (24.45 சதவீதம்) என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே அதிக அளவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் 1,56,920 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா (85,130), கர்நாடகம் (79,798), தமிழகம் (53,860), உத்தரபிரதேசம் (50,242) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொண்டு, திறமையாக கையாண்டு நல்லதொரு வெற்றியை பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீது மத்திய, மாநில அரசாங்கங்கள் கவனம் செலுத்தி, ஒத்துழைத்து, செயல்பட்ட விதம்தான், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே சிகிச்சை பெறவும், அதிக எண்ணிக்கையிலானவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பவும் வழிவகுத்துள்ளது.
இந்தியாவில் தரமான சிகிச்சை அளித்து வருவதால் குணம் அடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிர்வாகிகள், “தொடக்கத்தில் இருந்தே மத்திய அரசு ஒரு தரப்படுத்தப்பட்ட, முன்கூட்டியே திட்டமிட்ட, செயல் திறன் மிக்க வழிமுறையை பின்பற்றி வந்தது. இந்த மேலாண்மை உத்தி, கொரோனா இறப்புவிகிதம் 1.91 சதவீதமாக குறைய காரணமானது” என கூறியிருக்கிறார்கள்.