கொரோனாவின் பிடியில் இந்தியா மிகத்தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் 60,000க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளிகள் இங்கு கண்டறியப்பட்டு வருகின்றனர். இருப்பினும்கூட, கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 60,000 க்கும் மேற்பட்டோர் தினமும் நோயிலிருந்து மீண்டும் வருகின்றனர்.
கொரோனாவிலிருந்து மக்கள் முழுவதுமாக விடைபெற, இதை தடுக்கும் ஆற்றலை மக்கள் பெற வேண்டியது அவசியம். அதற்கு, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் எனும் நிலை இருக்கிறது. ஆனால் தடுப்பூசிக்கான பணிகள் முடிவடைய இன்னும் வெகுகாலம் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் பெருவாரியான மக்கள் நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுவிட்டால், அவர்கள் நோயிலிருந்து தற்காக்கப்படுவர் என்று மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. மக்கள் நோய் எதிர்ப்புத் திறனை பெற்றுள்ளனரா இல்லையா என்பதை, ஆய்வின் மூலமாக மட்டுமே அறியமுடியும்.
அப்படியொரு ஆய்வை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தற்போது செய்துள்ளது. பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய வேண்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிவுறுத்தலின்படி நோய் கட்டுப்பாட்டுபகுதிகளில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், பத்திரிகையாளர் கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தேசிய காச நோய் நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சென்னையில் 12 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தது.
இதுகுறித்து ஆய்வு நடத்திய மருத்துவ நிபுணர் கூறுகையில், “இந்த ஆய்வின் முடிவில் 12 ஆயிரம் மாதிரிகளில் 50 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முழுமையாக முடிவடைந்த பிறகு தான் எத்தனை பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது என்பது தெளிவாக தெரியவரும்.
ஆய்வு விரைவில் முடிக்கப்பட்டு சென்னை மாநகராட்சியிடம் முழு விவரங்களும் ஒப்படைக்கப்படும். இந்தியாவில் 4-ல் ஒரு பகுதியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. அதன்படி டெல்லியில் 23 சதவீதம் பேருக்கும், மும்பையில் 57 சதவீதம் பேருக்கும், புனேவில் 50 சதவீதம் பேருக் கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது” என்றார்.
பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த அளவு உள்ளது என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ‘எலிசா’ பரிசோதனை முறையில் சோதனை செய்யப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு கண்டறியப்படுகிறது.